100+ Members



ஜீவநாடி ஆதிசக்தியின் வாக்கு
பரமாத்மா சக்தி பூமியின்
சிறப்பு முகவுரை
வெற்றிகரமாக ஞான ஸ்தலம், பரமாத்மா சக்தி பீடமாக மாறியதை முன்னிட்டு, சக்தி மலையும் வசமானது.மற்றபடி நல்ல எதிர்காலமே இச்சத்திய பூமியின் மூலம் மலேசியா நாட்டு மக்களுக்கு உண்டு.
இப்பேர்பட்ட சிறப்புமிக்க மலை இனி குவலயத்தில் தோன்ற போவதும் இல்லை, அதே போல் இந்த சக்தி பூமியின் மகிமையை அறிந்து மக்கள் நடக்க பல அதிசய மாற்றங்கள் மக்கள் காண்பார்கள் விரைவில்/ காலப்போக்கில்.
கலியில் கிடைத்த வரப்பிரசாதம் இம்மலை சார்ந்த பூமி, சூட்சுமமாக அறிந்த உண்மையை கூற முடியாது ஆனால் அகத்தால் உணர்த்தப்படும் உண்மையை மக்கள் காண்பார்கள், இச்சத்திய பூமியை யாராலும் அசைக்க முடியாது.
இது ஆதி பரமகுரு முருகனின் அருள் ஆட்சி செங்கோல் உடையவனாக வாலை ரிஷியாக வலம் வரும் காலம்,முருகனே, அகத்தியன், அகத்தியனே வாலை ரிஷி, இவர்கள் மூவரும் வேறு இல்லை, ஒன்றாக இணைந்த சத்திய பூமி இது.
இதில் நற்பலன் பெறக்கூடியவர்களே அதிகம், ஆகையால் விரைவில் பல லட்சம் மக்கள் கூட்டம் அலைமோதும் காலங்கள் உண்டு, அனைத்து பரமாத்மாக்களின் அருள் ஆசியும் வாழ்த்தும் உண்டு இச்சபைக்கு, சத்தியமாக தர்மத்தை நல் ஒழுக்கத்தை நிலைநாட்டி நல்வழியில் மக்கள் நடக்க ஆசி புரிகிறோம் நாங்கள்.





